விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் : பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தல்

2452

மன்னார்குடி அருகே பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வல்லூர் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் எதிரில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டதில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். 2016-2017-ம் ஆண்டில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு அறிவித்துள்ள சலுகைகள் அனைத்தும் இடைத்தரகர்களின் இடையூறு இல்லாமல் கிடைத்திட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.