விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு நடவடிக்கை..!

311

தமிழக விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்கும் வகையில் 25 கோடியே 77 இலட்ச ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தை மேம்படுத்தத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

விவசாயம், மீன்வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, கோழிவளர்ப்பு, தேனீ வளர்ப்பு, வீட்டுத்தோட்டம், பண்ணைக் குட்டைகள் அமைப்பு, சாண எரிவாயுக் கலன், தோட்டக்கலை, மண்புழு உரக்கூடம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் முதற்கட்டமாகத் திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், விழுப்புரம், ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த 5 மாவட்டங்களில் இரண்டாயிரத்து ஐந்நூறு ஒருங்கிணைந்த வேளாண் குழுக்கள் உருவாக்கி, அதில் குழுவுக்கு இரண்டு விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வரை மானியம் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு வேளாண்மைத் துறை, கால்நடைத்துறை, மீன்வளத்துறை ஆகிய மூன்று துறைகள் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.