தலையில் கல்லைபோட்டு விவசாய தம்பதிகள் கொலை..!

216

செங்கம் அருகே நகைக்காக விவசாய தம்பதிகள் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கடலாடியில் கண்ணன், வள்ளி தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர். இவரது மகன் மற்றும் மகள் திருப்பூரில் வேலை பார்த்துவருகின்றனர். விவசாய நிலத்தில் வீடு கட்டி கடந்த 15 ஆண்டுகளாக தனியாக வசித்துவந்துள்ளனர். இதனை நோட்டம் விட்ட மர்ம நபர்கள் தனியாக இருந்த தம்பதியினரில் தலையில் கல்லைபோட்டு கொன்று கம்மல், நகையை பறித்துள்ளனர். பின்னர் இருவரது உடலையும் கிணற்றில் வீசிச்சென்றுள்ளனர்.

கண்ணன் வெகுநேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், அருகில் சென்று பார்த்துள்ளனர். அப்போது கிணற்றில் இருவரும் சடலமாக மிதப்பதை கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.