தண்ணீர் இன்றி பயிர் கருகியதால் மனமுடைந்த விவசாயி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

99

தமிழகத்தில் தண்ணீர் இன்றி பயிர் கருகியதால் மனமுடைந்த விவசாயிகள் உயிரிழந்து வருவது தொடர் கதையாகி வருகிறது. வறட்சி காரணமாக தமிழகத்தில் இதுவரை 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த கீழையூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவர் தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்து இருந்தார். இந்தநிலையில், தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதை கண்டு மனமுடைந்த வெங்கடாச்சலம், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.