மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டம்..!

283

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, மத்திய அரசை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளியே சென்ற விவசாயிகள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து முட்டி போடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் பலியானவர்களுக்கு விவசாய தலைவர்கள் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.