2 குழந்தைகளை கொன்ற அபிராமியின் கணவர் விஜய்யை அழைத்து ரஜினி ஆறுதல்..!

279

நடிகர் ரஜினிகாந்த் குழந்தைகளை இழந்த குன்றத்தூர் விஜய் மற்றும் கால்களை இழந்த ரசிகர் ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

சென்னை குன்றத்தூர் அருகே இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்ற அபிராமியின் கணவர் விஜய்யை, நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு நேரில் அழைத்து ஆறுதல் கூறினார். எந்த ஆறுதலும், இந்தக் கொடிய நிலைமைக்கு மருந்தாகாது, மீண்டு வாருங்கள் விஜய் என்று கலங்கிய கண்களுடன் ரஜினி அவரை தேற்றினார். அதேபோல் மதுரை திருநகரைச் சேர்ந்த 33 வயதான காசி விஸ்வநாதன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஜினி நடித்த காலா பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றுவிட்டு மதுரைக்கு ரயிலில் திரும்பியபோது தவறி விழுந்து பலத்த காயம் அடைந்ததில் 2 கால்களும் அகற்றப்பட்டன.

சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காசி விஸ்வநாதனை நேரில் சந்தித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். இதனிடையே, கோவை மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள பழங்குடியினர் குடியிருக்கும் ஓடந்துறை மலைக் கிராமத்தில் மின்சார உற்பத்தி, தொகுப்பு வீடுகள் என்று மலைக்க வைத்த சாதனைகளுக்குச் சொந்தக்காரரான சண்முகத்தை சந்தித்து பாராட்டு தெரிவித்தார் ரஜினி.