சிதம்பரம் குடும்பத்தினர் மனு மீது இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!

363

கருப்புப்பண தடுப்புச் சட்டத்தின்கீழ், ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாகவும், அதுகுறித்து வருமானவரி கணக்கை காட்டாமல் மறைத்து விட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது, இதுதொடர்பாக, கருப்புப்பண தடுப்புச் சட்டத்தின்கீழ், வருமானவரித்துறை சென்னை எழும்பூர் பொருளாதாரத்துறை நீதிமன்றத்தில் புகார் மனு அளித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், அவரது மகன் கார்த்திக், மருமகள் ஸ்ரீநிதி கார்த்திக் ஆகியோர் கடந்த மாதம் 25ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இதனிடையே, கருப்புப்பண சட்டத்தின்கீழ் வரும் வழக்குகளை விசாரிக்க தமிழகத்தில் சிறப்பு நீதிமன்றம் இல்லாததால், தங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு செல்லாது என அறிவிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் குடும்பத்தினர் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் நடத்தி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.