கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 3 பேர் கைது!

763

மேற்கு வங்க மாநிலத்தில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் அச்சடிக்கப்படும் கள்ள இந்திய ரூபாய் நோட்டுகள் எல்லை வழியாக கடத்தி வரப்பட்டு ஏஜெண்ட்கள் மூலம் நாடு முழுவதும் புழக்கத்தில் விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் முர்சிதாபாத் ராணிபகான் புடியா சந்தை பகுதியில் கள்ளநோட்டு விற்பனை செய்யப்படுவதாக அம்மாநில போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு ரகசியமாக கண்காணிப்பு மேற்கொண்ட போலீஸார், 3 பேரை கையும்களவுமாக கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் 5 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுக்களை கட்டுக்கட்டாக பறிமுதல் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுnew-2000-currency_12ba744a-cc37-11e7-855e-d08d9ee048bd