87 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தகவல் தவறான முறையில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாக பேஸ்புக் தலைமை தொழில்நுட்ப அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..!

1848

87 மில்லியன் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவினால் தவறான முறையில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாக பேஸ்புக் தலைமை தொழில்நுட்ப அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டதால் அந்நிறுவனம் உலக அளவில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பை வெற்றி பெறச் செய்ய கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் இத்தகவல் திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுமார் 87 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் தவறான முறையில் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கலாம் என பேஸ்புக் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மைக் ஷிரோபெஃபர் தெரிவித்துள்ளார். மேலும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா ஊழல் வெடித்ததால் அந்நிறுவனத்தின் பங்குகளும் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.