பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டது உண்மை தான் என அதன் நிறுவனர் மார்க் ஜூகர் பெர்க் ஒப்புக் கொண்டுள்ளார்..!

1071

பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டது உண்மை தான் என அதன் நிறுவனர் மார்க் ஜூகர் பெர்க் ஒப்புக் கொண்டுள்ளார்.பிரிட்டனைச் சேர்ந்த கேம்ப்ரிட்ஜ் அனாலிடிக்கா நிறுவனம், பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை திருடி, அதை தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அமெரிக்க, பிரிட்டன் தேர்தல்களில் இந்த முறைகேடு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர் பெர்க் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டது உண்மை தான் என்றும், தகலவல்களை பாதுகாக்க தவறி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் பேஸ்புக்கிடம் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளன.