இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது..!

717

இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்லாமியர்களுக்கும், சிங்கள பெளத்தர்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. மற்ற பகுதிகளுக்கும் வன்முறை பரவுவதை தடுக்க அந்நாட்டு அரசு பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூ டியூப் உள்ளிட்ட வலை தளங்களின் சேவையை முடக்கியது. இந்த நிலையில் பேஸ்புக்கில் வன்முறையை தூண்டும் கருத்துக்கள் நீக்கப்படும் என அந்த நிறுவனம் உறுதி அளித்ததை அடுத்து, பேஸ்புக் மீதான தடை மட்டும் இலங்கை அரசு நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு அதிபர் மைத்திரிபால சிறிசேனா ஒப்புதல் தெரிவித்துள்ளார்.