எஃப்-1 கார் பந்தயத்தில் டேனியல் ரிட்சியர்டோ முதலிடம்

354

மோனோகோவில் நடைபெற்ற பார்முலா ஒன் கார் பந்தயத்தில், ஆஸ்திரேலியாவின் டேனியல் ரிட்சியர்டோ வெற்றி பெற்றார்.

மோனோக்கோவில் உள்ள கார்லோ ஓடுபாதையில் பார்முலா ஒன் கார்பந்தயத்தின் 6வது சுற்று நடைபெற்றது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்தப் போட்டியில், 1 மணி நேரம் 42 நிமிடத்தில் இலக்கை கடந்து டேனியல் ரிட்சியர்டோ முதலிடம் பிடித்தார். இவரை தொடர்ந்து சபாஸ்டின் வெட்டல் இரண்டாவது இடத்தையும், லீவிஸ் ஹாமில்டன் மூன்றாவது இடத்தை பிடித்தனர். இதன் மூலம் 110 புள்ளிகளுடன் இங்கிலாந்து நாட்டின் ஹாமில்டன் முதலிடத்திலும், வெட்டல் 96 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ரிட்சியர்டோ 72 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.