ரபேல் விமான ஒப்பந்தத்தில் ரகசிய காப்பு அம்சம் இல்லை என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பிரான்ஸ் அரசு மறுப்பு..!

630

ரபேல் விமான ஒப்பந்தத்தில் ரகசிய காப்பு அம்சம் இல்லை என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பிரான்ஸ் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியதை கவனித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையில் 2008ஆம் ஆண்டு ரகசிய காப்பு ஒப்பந்தம் போடப்பட்டதாக தெரிவித்துள்ள பிரான்ஸ் அரசு, அதன்படி பங்குதாரர் கூறும் உரிய தகவலை இரு நாடுகளும் சட்டப்பூர்வமாக ரகசியம் காக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளது.