இளம்வீரர்களுக்கு அணியில் வாய்ப்புகள் அளிக்கப்படும் – ரவி சாஸ்திரி

230

இளம்வீரர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பிசிசிஐ அமைப்பின் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், தன்னை மீண்டும் பயிற்சியாளராக தேர்வு செய்த கபில் தேவ் தலைமையிலான குழுவிற்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார். மேலும் இந்திய அணியின் கட்டமைப்பில் அங்கம் வகிப்பது பெருமையும், கவுரவமும் அளிப்பதாகவும் ரவிசாஸ்திரி பெருமிதம் தெரிவித்தார். அடுத்த 2 ஆண்டுக்குள் அணியில் சுமுகமான மாற்றங்கள் என குறிப்பிட்ட ரவி சாஸ்திரி, அணியில் இளம்வீரர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் தனது பணிக்காலம் நிறைவடையும் போது இந்திய அணி சிறப்பான நிலையில் இருக்கும் என்றும் ரவிசாஸ்திரி தெரிவித்தார்.