கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள்

176

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை நம்ப வேண்டாம் என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்,.

ஆந்திர மாநிலம் குண்டூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தனது பங்களிப்பு இல்லாமல் இந்த தேர்தல் நடந்து முடிந்துள்ளது என்றும், துணை ஜனாதிபதி ஆவதற்கு முன்பு, ஒரே நாளில் 16 தேர்தல் கூட்டங்களில் பேசுவதை வழக்கமாக வைத்திருந்ததாகக் குறிப்பிட்டார். இப்போது மக்களிடமிருந்து கொஞ்சம் விலகியிருந்தாலும், மதிக்கத்தக்க பதவியில் இருப்பதாக கூறிய வெங்கையா நாயுடு, எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை நம்பாமல், நிஜ தேர்தலை மட்டும் நம்புங்கள் எனக் கூறியுள்ளார்.மேலும் சாதி, மதம், பணம் பார்த்து தேர்தலில் ‘சீட்’ கொடுப்பது கவலை அளிக்கும் விஷயம் எனக்கூறிய வெங்கையா நாயுடு, தேர்தலில் வெற்றிபெற கோடிக்கணக்கில் செலவளிப்பது ஜனநாயகத்தை கேலி செய்வதாக உள்ளது எனவும், நிகழ்ச்சியின்போது தெரிவித்தார்.