12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்து..!

327

இன்று தேர்வு எழுதும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.12ம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஓ.பன்னீர் செல்வம், பயின்ற பாடங்கள் அனைத்தும் வரிசைகட்டி வந்து உங்களுக்கு வழிகாட்டும் என்றும்நிறைந்த நம்பிக்கையுடன் சிறந்த முறையில் தேர்வு எழுதி சாதனை புரிந்திட வாழ்த்துகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் சாதிக்க வாழ்த்துக்கள் என பாமக இளைஞர் அணி தலைவர் வாழ்த்து கூறியுள்ளார்பொதுத்தேர்வை எழுதவுள்ள அனைவருக்கும்,தனது இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள் என ஆர்.கே. நகர் எம்எல்ஏ தினகரன் தெரிவித்துள்ளார்.தனது டிவிட்டர் பக்கத்தில் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன், தேர்வு எழுத உள்ள தமிழக மாணவர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.