தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை நடைபெறும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வை 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்..!

341

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை நடைபெறும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வை 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ, மாணவியர் எழுத உள்ளனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 6 ஆயிரத்து 737 பள்ளிகளில் படிக்கும் பிளஸ்டூ மாணவ, மாணவியருக்கு நாளை பொதுத் தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வை 4 லட்சத்து 17 ஆயிரத்து 952 மாணவர்களும், 4 லட்சத்து 80 ஆயிரத்து 810 மாணவிகளும் எழுதுகின்றனர். இதற்காக தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 427 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்வு மையத்தில் செல்போன்கள் கொண்டு வர மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வில் ஒழங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.