பா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் – ஈவிகேஎஸ் இளங்கோவன்

151

பா.ஜ.க.வின் கைப்பாவையாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் என ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு மையத்தில் நேரு கண்ட இந்தியா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட்சியின் மாநில துணை செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், அரசியல் நாடகம் நடத்தி வரும் நடிகர் ரஜினிகாந்த், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார் என குற்றம் சாட்டினார்.