ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியதன் எதிரொலியாக, வரும் அக்டோபருக்குள் பதவியில் இருந்து விலகவுள்ளதாக பிரதமர் டேவிட் கெமரூன் அறிவித்துள்ளார்.

237

28 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறலாமா, வேண்டமா, என்பது குறித்து நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வெளியேறவேண்டும் என்று 52 சதவீதமானோர் வாக்களித்ததால், பிரி்ட்டன், தனி நாடு போன்று சுதந்திரமாக செயல்படுவதற்கு வழி பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியை மக்களுடன் கொண்டாடிவரும் எதிர்க்கட்சியினர், ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவளித்து வந்த பிரதமர் டேவிட் கெமரூன் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், மக்கள் முன் உரை நிகழ்த்திய பிரதமர் டேவிட் கேமரூன், பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சி கருதியே, ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெறுவதற்கு ஆதரவு தெரிவித்ததாக கூறினார். எனினும், பிரிட்டன் மக்களின் விருப்பப்படி, வரும் அக்டோபர் மாதம், தான் முறைப்படி பதவி விலகப்போவதாகவும், அது குறித்து ராணியிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.