ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லண்டன், எடின்பர்க் உள்ளிட்ட நகரங்களில் இடதுசாரிகள் போராட்டம் நடத்தினர்.

255

ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஆண்டுதோறும் பெருந் தொகை பணம் செலுத்தி வருகின்றன. மேலும், பிற நாடுகளின் அகதிகளை ஏற்கவேண்டும் என்கிற ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையை அனைத்து உறுப்பு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. இத்தகைய காரணங்களால், கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பிரிட்டன், ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக முடிவு செய்தது. இதற்காக நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், 52 சதவீதம் பேர் விலகவேண்டும் என்று வாக்களித்தனர். இதையடுத்து, பிரிட்டனின் விலகல் உறுதியானது.

ஆனால், பிரிட்டனின் விலகலுக்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அகதிகளை வரவேற்போம், இனபேதத்திற்கு இடமில்லை எனபன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்ற இடதுசாரிகள், லண்டன், எடின்பர்க், கிரேட் பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.