ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதன் எதிரொலியாக, ஐரோப்பிய யூனியன் உடையக்கூடும் என்று சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

143

ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்வதற்காக, பிரிட்டனில் நேற்று பொது வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில், இங்கிலாந்து விலக வேண்டும் என 52 சதவீதம் மக்களும், நீடிக்க வேண்டும் என 48 சதவீதம் மக்களும் வாக்களித்துள்ளனர். எனவே, இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது உறுதியாகியுள்ளது.

இந்த தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நிகல் பேரஜ் , பெரும் போர் ஒன்றில் வெற்றியடைந்தது போல் உணர்வதாக தெரிவித்தார். மேலும், இந்த வெற்றியானது பிரிட்டனின் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்றும் அவர் தெரிவித்தார். ஊழல், பொருளாதாரம், மற்றும் அரசியல் பிரச்சனைகளுக்கிடையில் போராடிக்கொண்டிருந்த தங்களுக்கு தற்போது வெற்றி கிடைத்துவிட்டதால், இங்கிலாந்து நாடு நேர்மையான பாதையில் பயணிக்கும் என்றும், இன்றைய தினம் இங்கிலாந்தின் வரலாற்றில் சுதந்திரம் கிடைத்த நாளாக கொண்டாடப்படவேண்டும் என்றும் நிகல் பேரஜ் கூறியுள்ளார்.