ஒரே மரத்தில் தொங்கிய அண்ணன், தங்கை உடல் கொலையா, தற்கொலையா என விசாரணை!

851

சத்தியமங்கலம் அருகே ஒரே மரத்தில் தொங்கியபடி அண்ணன், தங்கை தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் நீர்க்குண்டிபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஸ். இவரது சித்தி மகள் சுமித்ரா. 3 ஆண்டுகளுக்கு முன்பு சுமித்ராவிற்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் நிச்சயத்தார்த்தம் நடைபெற்றதாக தெரிகிறது. இந்த நிலையில், சில நாட்களில் மாதேஷூம், சுமித்ராவும் மாயமாகினர். இருவரும் தேடப்பட்டு வந்த நிலையில், கேர்மாளம் செல்லும் சாலையோரம் உள்ள மரத்தில் மாதேஷ் மற்றும் சுமித்ராவின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டன. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் இருவரும் தாளவாடி மலைப்பகுதியில் வேலை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையா, தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.