தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை – அமைச்சர் செங்கோட்டையன்

223

தமிழுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 55 லட்சம் ரூபாய் செலவில் புதியதாக காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றார். இந்த ஆண்டு முதல் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 960 மாணவ, மாணவியருக்கு தலா 20 ஆயிரம் ரூபாயும், உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் 960 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என செங்கோட்டையன் கூறினார். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.