சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு..!

131

பெருந்துறை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு, பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள சிப்காட்டில் அமைந்துள்ள தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட மக்கள் நலசங்கம் என்ற அமைப்பை அப்பகுதி மக்கள் ஏற்படுத்தி, ஆலைகளுக்கு எதிராக போராடி வருகின்றனர். இதனையடுத்து, மாசுக்காட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் பொதுமக்களின் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.