பொங்கல் பண்டிகை முன்னிட்டு, ஈரோட்டில் பூக்களின் விலை பலமடங்காக உயர்ந்துள்ளதால் பூ வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

128

பண்டிகை காலங்களில் பூக்கள் அதிக அளவில் தேவைப்படுவதால், அதன் விலை அதிகரிப்பது வழக்கம். ஆனால் சாகுபடி செய்ய தேவையான தண்ணீர் இல்லாமல் பூ செடிகள் கருகி காணப்படுகின்றன. இந்நிலையில் பூக்களுக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டதையடுத்து பூக்களின் விலை பலமடங்காக உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கமிஷன் மண்டிக்கு வந்த பூக்களின் விலை 50 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனர். அதனடிப்படையில் கிலோ 600 ரூபாய்க்கு விற்பனையான குண்டு மல்லி 800 ரூபாயிக்கும், ஜாதிப்பூ 600 ரூபாயிக்கும் விற்பனை செய்யப்படுவதாகவும், ரோஜா, சம்மங்கி செவ்வரளி, கேந்தி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்கள் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறினர். இதனால் பூ வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.