நெசவாளர் சங்க பிரதிநிதிகளுடன் அமித்ஷா சந்திப்பு..!

117

தமிழகத்துக்கு இன்று வருகை தரும் பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா, ஈரோடு அருகே நடைபெறும் பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் அமித்ஷா பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈரோடு அடுத்த சித்தோட்டுக்கு வருகிறார்.. சித்தோட்டில் நெசவாளர் சங்க பிரதிநிதிகளை சந்தித்துப் பேசும் அவர், பின்னர் ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் மாவட்ட பாரதிய ஜனதா நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு தேர்தல் பிரசாரம் செய்கிறார். ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுக்கூட்டத்துக்கு ஈரோடு வருகை தரும் அமித்ஷா கூட்டணி குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.