ஈரோட்டு அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

248

ஈரோட்டு அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஈரோட்டில் உள்ள பெரிய சேமூர் பகுதியில் அ.தி.மு.க. அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் மாநகராட்சி துணை மேயர் கே.சி.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் உள்ள அனைவருக்கும் வீடுகள் திட்டம், முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதன் சிறப்பு அம்சங்களையும், அதனால் மக்கள் பெறுகிற பயன்கள் குறித்தும், பொதுமக்களுக்கு விளக்கமாக கூறப்பட்டது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.