80 கோடி மதிப்பில் 3 புதிய பாலங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா

156

சேலத்தை விபத்தில்லாத, போக்குவரத்து நெரிசல் இல்லாத பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

சேலம் கந்தம்பட்டியில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் சார்பில், நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துக் கொண்டார்.
இந்த விழாவில், சேலம் கந்தம்பட்டி சந்திப்பில் 33.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலங்கள் கட்டும் பணி, வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் புழுதிக்குட்டை – சந்துமலை சாலை புங்கமடுவு அருகில் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்டப்பாலம் மற்றும் தும்பல் அருகில் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்டபாலம் என மொத்தம் 40 கோடி ரூபாய் மதிப்பிலான 3 புதிய பாலப்பணிகளுக்கு முதலமைச்சர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.இதனைத்தொடர்ந்து வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 12 கோடியே 26 லட்ச ரூபாய் மதிப்பில் 4 ஆயிரத்து 49 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி, சேலத்தை போக்குவரத்து நெரிசல் இல்லாத, விபத்தில்லாத பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். உயர்மட்டப்பாலங்களால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்துள்ளதாகக் கூறிய அவர், அடுத்த 5 மாத காலத்தில் உயர்மட்டப்பாலங்கள் கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார் .