ஓபிஎஸ் – இபிஎஸ் சகோதரர்கள் போல கட்சியை நடத்தி வருகின்றனர் – எஸ்.பி.வேலுமணி

182

ஊடகங்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளும் எதிர்பார்ப்பது போல, அதிமுகவில் எதுவும் நடக்காது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓபிஎஸ்-ஈபிஎஸ் சகோதரர்கள் போல் இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார்கள் எனக் கூறினார். இதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை பெறவே டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்தோம் எனவும், தமிழகத்திற்கு தேவையான குடிநீர் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசிடம் கேட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.