இபிஎஸ், ஓபிஎஸ் அணிகளுக்கு இடையே கோஷ்டி மோதல் வலுக்கிறது-ராஜேந்திர பிரசாத், அதிமுக முன்னாள் அமைச்சர்!

2176

கன்னியாகுமரி மாவட்டத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அணிகளுக்கு இடையே கோஷ்டி மோதல் வலுத்துவருவது, அதிமுக தொண்டர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைந்தபின்னரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுகவினர் இரு அணிகளாகவே செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஓபிஎஸ் அணியைச்சேர்ந்தவர்களின் ஆலோசனைக்கூட்டம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், இபிஎஸ் அணியைச்சேர்ந்த மாவட்ட செயலாளர் விஜயகுமார் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், விஜயகுமார், அதிகாரிகள் துணையுடன் அரசின் ஒவ்வொரு துறைகளிலும் கமிஷன் பெற்று வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. எனவே, மாவட்ட செயலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், அதிமுகவின் இருஅணிகளும் ஒரே அணியாக செயல்பட முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.