முதல்வர் தலைமையில் குடிமை வசதிகள் மறுஆய்வுக் கூட்டம்..!

738

சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் குடிமை வசதிகள் மறு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், மழை நீரை சேமிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், மழைக்காலத்தில், சாலைகளில் தண்ணீர் தேங்காமல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிச்சாமி மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், வருவாய் துறை ஆணையர் சத்யகோபால் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.