வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம்..!

141

தமிழகத்தில், வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம், சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனி்ச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உட்பட அரசு உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். இதுதவிர, முன்னணி தொழிற்சாலை நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்புகளின் நிர்வாகிகள், பிரதிநிதிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில், பொறியியல் பட்டதாரிகளுக்கான செயல்திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகளை மேம்படுத்துதல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. படிப்பு முடிந்து பொறியியல் பட்டத்துடன் வருபவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்புகளை வழங்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.