ஆசிரியர் தினம் : தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் வாழ்த்து

512

ஆசிரியர் தினத்தையொட்டி தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, தமிழக ஆளுநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாணவர்களுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் ஆசிரியர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கிடவும், தரமான கல்வியை தங்குதடையின்றி பெற்றிடவும், அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதை பட்டியலிட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தமிழக அளவிலும், தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

அறிவுச் செல்வத்தை அள்ளித்தந்து, அறியாமை இருளை அகற்றிடும் ஆசிரியர் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். பொறுப்புடன் மாணவர்களை உருவாக்குதலும், அவர்களை நல்வழிப்படுத்துதலிலும் தாய், தந்தையைக் காட்டிலும் ஆசிரியர்களே முதன்மை பெறுகிறார்கள் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் கூறியுள்ளார்.