முல்லைப்பெரியார் நீர் திறப்பில் கேரளா தவறான குற்றச்சாட்டு..!

349

முல்லைப் பெரியார் அணையில் 142 அடி தண்ணீர் இருப்பு வைக்க கூடாது என்பதற்காகவே கேரள அரசு தவறான குற்றச்சாட்டை முன் வைப்பதாக முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.

திருச்சி முக்கொம்பில் மேலணையை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முல்லைப்பெரியார் அணையின் நீர் மட்டத்தை குறைக்காததால், வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை என்று திட்டவட்டமாக கூறினார். பல்வேறு அணைகளில் இருந்து அதிகளவில் உபரி நீர் வந்ததன் காரணமாக கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டதாக கூறிய முதலமைச்சர் பழனிச்சாமி, முல்லைப் பெரியாரில் 142 அடி தண்ணீர் இருப்பு வைக்க கூடாது என்பதற்காகவே கேரள அரசு தவறான குற்றச்சாட்டை முன்வைப்பதாக விளக்கம் அளித்தார்.