குறுக்கு வழியில் அதிமுக அரசை வீழ்த்த முடியாது |எடப்பாடி பழனிசாமி

88

குறுக்கு வழியை கையாண்டு அதிமுக அரசை யாராலும் வீழ்த்த முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி. ராமச்சந்திரன் பிறந்த நாள் வரும் 17 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குறுக்கு வழியை கையாண்டு அதிமுக அரசை யாராலும் வீழ்த்த முடியாது என கூறினார். வழக்குகளை தொடர்வதற்கே திமுகவின் காலம் கடந்துவிடுவதாகவும், அந்த கட்சி, மக்ளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதரவில்லை எனவும் விமர்சனம் செய்தார்.