மறைந்த ஏ.கே.போஸ் உடலுக்கு முதலமைச்சர் பழனிச்சாமி அஞ்சலி..!

323

அதிமுகவில் சிறப்பாக பணியாற்றியது மட்டுமன்றி, மக்களின் நன்மதிப்பையும் பெற்றவர் ஏ.கே.போஸ் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

அதிமுக சார்பில் போட்டியிட்டு, 3 முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய மதுரை திருப்பரங்குன்றம் ஏ.கே.போஸ் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, இன்று அதிகாலை உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் ஜீவா நகரில் உள்ள அவரது வீட்டில் ஏ.கே.போஸ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மறைந்த செய்தி அறிந்ததும், சென்னையில் இருந்து உடனடியாக மதுரை புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஜீவா நகரில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜீ, ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டவர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் .

இதனைத்தொடர்ந்து, ஏ.கே.போஸ் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி, ஏ.கே.போஸின் மறைவு மிகுந்த வேதனையும் ,துயரமும் கூறினார், மறைந்த ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெற்றவர் ஏ.கே.போஸ் என்றும், அதிமுகவிற்கு விசுவாசமாக இருந்து செயல்பட்டவர் என்று அவர் தெரிவித்தார். மதுரை மாவட்ட அதிமுக வின் மூத்த நிர்வாகியான ஏ.கே.போஸின் மறைவு அவரது குடும்பத்தினர், ஆதராவாளர்கள், கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.