8 வழிச்சாலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

297

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக நாளை ஆதரிக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சூசகமாக தெரிவித்தார்.

மேட்டூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,சத்துணவு திட்டத்துக்கு முட்டை கொள்முதலில் முறைகேடு நடைபெறவில்லை என்று கூறினார். 8 வழிச்சாலை திட்டத்தால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது என்று கூறிய முதலமைச்சர் பழனிச்சாமி, நிலம் எடுக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார். 8 வழிச்சாலை விவகாரத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் பரப்பி, மக்களை திசை திருப்பி வருவதாகவும் முதலமைச்சர் பழனிச்சாமி விளக்கம் அளித்தார்.

காவிரி பிரச்சினையின்போது, நாடாளுமன்றத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக எந்த கட்சியும் குரல் கொடுக்கவில்லை என்று கூறிய முதலமைச்சர் பழனிச்சாமி, ஆந்திர மாநில பிரச்சினைக்காகவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுவதாகவும் தெரிவித்தார்.