வருங்கால வைப்பு நிதியை கொண்டு, பணியாளர் வீடு வாங்குவதற்கான புதிய திட்டம் விரைவில் அமல்படுத்தப்படுகிறது.

314

வருங்கால வைப்பு நிதியை கொண்டு, பணியாளர் வீடு வாங்குவதற்கான புதிய திட்டம் விரைவில் அமல்படுத்தப்படுகிறது.
வருங்கால வைப்பு நிதியை பணியாளர்கள் அடமானம் வைத்து வீடு வாங்கிக் கொள்வதற்கான திட்டத்தை விரைவில் கொண்டுவர இருப்பதாக வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்காலங்களில் செலுத்த வேண்டிய கடன் தொகையை, பிஎப் பணத்திலிருந்து மாதாந்திர தவணை தொகையாக கட்டிக்கொள்ளும் வசதியையும் பிஎப் அமைப்பு கொண்டுவர இருக்கிறது. இதன் மூலம் 4 கோடி பிஎப் சந்தாதாரர்கள் பயனடைவார்கள். அதேசமயம், பணியாளர்களுக்கு நிலத்தை வாங்கித் தருவதையோ, வீடுகளை கட்டித் தருவதையோ பிஎப் அமைப்பு செய்யாது என்றும், அவர்களாகவே வெளிச்சந்தையில் வீடுகளை தேர்வு செய்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.