இபிஎப் வட்டி விகிதம் 8.65 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

353

இபிஎப் வட்டி விகிதம் 8.65 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இபிஎப் உறுப்பினர்களின் கூட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில், 2016 – 17 ம் நிதியாண்டிற்கான இபிஎப் எனப்படும் தொழிலாளர் வைப்பு நிதி வட்டிவிகிதத்தை 8.65 சதவீதமாக குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அதிகாரப் பூர்வ அறிவிப்பை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 2015 -16ம் நிதியாண்டில் இபிஎப் வட்டிவிகிதம் 8.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.