மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்ததாக திவாகரன் மகன் ஜெயஆனந்த் விளக்கம்..!

214

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது கண்ணாடி வழியாக பார்த்ததாக, திவாகரன் மகன் ஜெயஆனந்த் ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையம் திவாகரன் மகன் ஜெயஆனந்த்திற்கு சம்மன் அனுப்பியிருந்தது. அதனை தொடர்ந்து அவர் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது வீடியோக்கள் எடுக்கப்பட்டதாகவும், அவை தொடர்ச்சியாக வெளியிடப்படும் என ஜெய ஆனந்த் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் ஆறுமுகசாமி ஆணையம் அவரிடம் விசாரணை நடத்தியது. அப்போலோ மருத்துவமனை மருத்துவர் நளினியும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி, நீதிபதி ஆறுமுகசாமி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.