தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் : ஒரு நபர் ஆணையத்தின் 3-ம் கட்ட விசாரணை இன்றுடன் நிறைவு

279

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் மூன்றாம் கட்ட விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றது.

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ம் தேதி நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிர் இழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதனையடுத்து, துப்பாக்கி சூடு நடந்த இடங்கள், கலவரத்தில் சேதப்படுத்தப்பட்ட வாகனங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்த ஆணையம், பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில் கடந்த 27-ம் தேதி தொடங்கப்பட்ட மூன்றாம் கட்ட விசாரணையில் 14 பேர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றது.