எண்ணூர் துறைமுகத்திற்கு கார்களை ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரி, உயிரழுத்த மின் கம்பிமீது உரசி ஏற்பட்ட தீவிபத்தில், சுமார் 1கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமடைந்தன.

265

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எண்ணூர் துறைமுகத்திற்கு கார்களை ஏற்றிவாறு கன்டெய்னர் லாரி ஒன்று சென்றுள்ளது. துறைமுகம் அருகில் சென்றுக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த மின் கம்பியில் எதிர்பாராத விதமாக உரசியதில், திடீரென லாரியின் மீது தீ பற்றிக்கொண்டது. உடனே, தகவலின்பேரில் 8 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 3 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில், லாரியினுள் இருந்த சுமார் 1கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.