இங்கிலாந்து கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா ஒன் கார் பந்தயத்தில் பிரிட்டன் வீரர் ஹாமில்டன்…

216

இங்கிலாந்து கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா ஒன் கார் பந்தயத்தில் பிரிட்டன் வீரர் ஹாமில்டன் வெற்றி பெற்றார்.
இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் நகரில் கிராண்ட்பிரிக்ஸ் பார்முலா ஒன் கார் பந்தயம் நேற்று நடைபெற்றது. இந்த கார் பந்தயத்தில் உலகின் முன்னணி வீரர்கள் அடங்கிய 20 அணிகள் கலந்து கொண்டன. போட்டி தொடங்கியதும், சீறிப்பாய்ந்த கார்கள் ஒன்றை, ஒன்று முந்திச் சென்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், பந்தய தொலைவை, 1 மணி நேரம், 21 நிமிடங்களில் கடந்து, பிரிட்டன் வீரர் ஹாமில்டன் வெற்றி பெற்று அசத்தினார். இந்த ஆண்டு பார்முலா-1 பந்தயத்தில் அவர் பெறும் 4-வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.