இங்கிலாந்து சுரங்க ரயில் குண்டு வெடிப்பில், மேலும் ஒரு தீவிரவாதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

346

இங்கிலாந்து சுரங்க ரயில் குண்டு வெடிப்பில், மேலும் ஒரு தீவிரவாதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனின் பார்சன் கிரீன் ரயில் நிலையத்தில் கடந்த 15-ம் தேதி சுரங்க ரயிலில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் இங்கிலாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிளாஸ்டிக் பக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு தொலைவிலிருந்து ரிமோட் கண்ட்ரோல் முறையில் வெடிக்கச் செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில், இந்த குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது. இதையடுத்து சனிக்கிழமை 18 வயதான கென்ட் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் 21 வயதான இளைஞரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்து காவல்துறையினர் துரித விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.