இங்கிலாந்து பெண் எம்.பி. கொலை! நவம்பரில் வழக்கு விசாரணை!!

358

பிரிட்டன் பெண் எம்.பி. ஜோ காக்ஸ் படுகொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தாமஸ் மேருக்கு எதிராக வரும் நவம்பர் மாதம் வழக்கு விசாரணை தொடங்குகிறது.
பிரிட்டனின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி. ஜோ காக்ஸ் (41) கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பொது இடத்தில் கத்தியால் குத்தப்பட்டும், துப்பாக்கியால் சுடப்பட்டும் அவர் படுகொலை செய்யப்பட்டது உலகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக, பிர்ஸ்டால் நகரைச் சேர்ந்த தாமஸ் மேர் (52) என்பவரை போலீசார் கைது செய்து, கொலை, படுகாயம் ஏற்படுத்துதல், கொலை நோக்குடன் ஆயுதங்களை வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றப் பிரிவுகளின்கீழ் தாமஸ் மேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தனர்.
இந்த நிலையில், அவர் மீதான வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 14-ஆம் தேதி தொடங்க லண்டன் நீதிமன்றம் முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.