மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி : 124 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி

450

மேற்கு இந்திய தீவுகளுக்கான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி அனைத்து தரப்பு போட்டிகளிலும் விளையாடி வருகிறது. இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி பிரிஸ்டலில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 369 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, மொயின் அலி 102 ரன்களும், ஜோ ரூட் 84 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து இமாலைய இலக்குடன் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதனால் அந்த அணி 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் லியாம் பிளங்கெட் 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.