இங்கிலாந்தில் முழுக்க, முழுக்க மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் படகு உலக நாடுகளின் கவனத்தை கவர்ந்து வருகிறது.

உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக உள்ள ஒரு விஷயம், பிளாஸ்டிக் கழிவுகளை எவ்வாறு அழிப்பது என்பதே. இதற்கு தீர்வு காணும் வகையில் இங்கிலாந்தை சேர்ந்த அறிவியலாளர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்து அதன் மூலம் ஒரு படகை தயாரித்து வெற்றி கண்டுள்ளனர். முழுக்க, முழுக்க மறுசுழற்சி முறையில் பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த படகு தனது பயணத்தை தொடங்கி உள்ளது. ice_screenshot_20180831-150120லண்டன் நகரின் குறுக்கே ஓடும் தேம்ஸ் ஆற்றில் மிதக்க விடப்பட்ட அந்த படகில் 12 பேர் பயணித்தனர். அவர்கள், ஆற்றில் மிதந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பாட்டில்களை சேகரித்தனர். பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்து அதன் மூலம் பல்வேறு பொருட்களாக தயாரிக்க முடியும் என்றும், இதனால், பிளாஸ்டிக் குப்பைகளை தேங்க விடாமல் அகற்ற முடியும் எனவும் அந்நாட்டு அறிஞர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.