இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றப் போவது யார்?

607

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது கடைசி ஒருநாள் போட்டி மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று நடைபெறவுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து, நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் 2 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1 க்கு 1 என்ற கணக்கில் சமநிலை வகித்து வருகிறது. இந்நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் 3வது ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் ஒருநாள் தொடரை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.