இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், இன்றைய ஆட்டநேர இறுதியில் இந்திய அணி 146 ரன்கள் எடுத்துள்ளது.

159

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், இன்றைய ஆட்டநேர இறுதியில் இந்திய அணி 146 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. 4-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்சில் 400 ரன்களை குவித்தது.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி இன்றைய ஆட்டநேர முடிவில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. முரளி விஜய்யும், புஜாராவும் இணைந்து 107 ரன்கள் சேர்த்தனர்.