இங்கிலாந்தில் விமானப்படை தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவு..!

404

இங்கிலாந்தில் அதிநவீன போர் விமானத்தை அந்தரத்தில் நிறுத்தி விமானி ஒருவர் சாகசம் நிகழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் ராயல் ஏர்போர்ஸ் எனப்படும் விமானப்படை தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை கொண்டாடும் வகையில் கோலாகல விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், விமானப்படை சார்பில் சாகச நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், 120 மில்லியன் பவுண்ட் மதிப்பு கொண்ட எப்.35 லைட்னிங் இரண்டு வகையை சேர்ந்த அதிநவீன போர் விமானத்தை நடுவானில் அந்தரத்தில் நிறுத்தி விமானி ஒருவர் சாதனை நிகழ்த்தியுள்ளார். இதனைக் கண்டு பார்வையாளர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.